பொது செய்தி

தமிழ்நாடு

சாரலாக மாறிய பருவமழை :சோலையாறு நீர்மட்டம் சரிவு

Added : நவ 29, 2019
Advertisement
 சாரலாக மாறிய பருவமழை :சோலையாறு நீர்மட்டம் சரிவு

வால்பாறை:வால்பாறையில், வடகிழக்கு பருவமழை சாரல் மழையாக மாறியதால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் சரிய துவங்கியுள்ளது.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழைக்கு மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு ஆகிய ஐந்து அணைகளும் கடந்த ஆக., மாதம் நிரம்பின.தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, மூன்று முறை நிரம்பியது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரம் குறைந்து, சாரல் மழையாக பெய்வதால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 155.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 177 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 255 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):காடம்பாறை - 6, மேல்ஆழியாறு - 5, சர்க்கார்பதி - 3, பொள்ளாச்சி - 3.5, நெகமம் - 3, நல்லாறு - 10, சுல்தான்பேட்டை - 7 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X