பொது செய்தி

தமிழ்நாடு

டெண்டர் முடிந்து ஓராண்டாச்சு ரோடு போடும் பணி என்னாச்சு

Added : நவ 29, 2019
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அருகே, ரோடு அமைப்பதற்கான டெண்டர் காலம் முடிந்து ஓராண்டாகியும், பணிகள் நிறைவடையாமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி அடுத்த பருத்தியூரில் இருந்து, ஆழியாறு வரையில், பிரதம மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தில், 1.51 கோடி ரூபாயில், 2.7 கி.மீ.,க்கு ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த, 2018 மார்ச், 23ம் தேதி ரோடு பணி துவங்கி, எட்டு மாதங்கள் பணி மேற்கொண்டு, 2018, நவ., 22ம் தேதி பணி நிறைவு செய்யப்படும் என, தகவல் பலகை வைக்கப்பட்டது.இந்நிலையில், டெண்டர் அனுமதியில் குறிப்பிடப்பட்ட தேதி முடிந்து ஓராண்டாகியும், ரோடு அமைக்கும் பணி நிறைவடையவில்லை.ஜல்லிக்கற்கள் கொட்டி சமப்படுத்தப்பட்டு உள்ளது, தார் ரோடு அமைக்கவில்லை. தற்போது, மழைக்கு ஆங்காங்கே குழி ஏற்பட்டு உள்ளதால், ரோட்டை பயன்படுத்த முடியாமல், விவசாயிகள், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இது குறித்து மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர். ரோடு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X