மார்க்கெட்டில் மரணக்குழி; வாகன ஓட்டுனர்கள் கிலி

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பல இடங்களில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதால், விபத்துகள் ஏற்படுகிறது.பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, 170 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. இப்பணிகளால் மக்கள் நிம்மதியிழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி வெங்காயம் மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்ட ஆள் இறங்கும் குழி, சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. இதனை கவனிக்காமல் வரும் வாகனங்கள் குழிக்குள் சிக்கிக்கொள்கின்றன. மேலும், வாகன ஓட்டுனர்களும் விபத்துக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: ஆள் இறங்கும் குழிகள் பல இடங்களில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. தொட்டிகள் மண்ணுக்குள் இறங்குவதற்கு காரணம் புரியவில்லை. பல ஆண்டுக்கு பலன் தரக்கூடிய திட்டப்பணிகள் தரத்துடன் மேற்கொள்ளப்படுவதில்லை.தொட்டியின் மேல் மூடிகள் மண்ணுக்குள் புதைந்தும், வெளியே நீண்டும் நிற்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது இவை சேதமடைந்துவிட்டால் கழிவுநீர் செல்லும் போது முறையாக செல்லுமா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, சேதமடைந்த இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X