பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகத்தில் ரேஷன் கடை; பெட்டியில் உறங்கும் புத்தகங்கள்

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த போடிபாளையத்தில், ரேஷன் கடை கட்டடம் உருக்குலைந்ததால், பாதுகாப்பு கருதி, நுாலக கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி போடிபாளையம் ஊராட்சியில், மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதற்காக, ஊராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த, 2004ல், ரேஷன்கடை கட்டப்பட்டது.ரேஷன்கடையில், 570 கார்டுகளுக்கு பொதுவினியோக திட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடை கட்டடம் தரமின்றி கட்டியதால், 12 ஆண்டுகளில் வலுவிழந்தது. மழைக்காலத்தில் ஒழுகுவதும், மழையில்லாத போது, கான்கிரீட் உதிர்ந்து விழுவதுமாக இருந்தது.கட்டடம் இடிந்து விழுந்தால், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, அருகில் உள்ள, நுாலக கட்டடத்துக்கு ரேஷன் கடை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, மாணவர்கள், கிராம இளைஞர்கள் பயன்பாட்டில் இல்லாத நுாலக புத்தகங்கள், அட்டைப்பெட்டிக்குள் பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் கூறியதாவது:பலமுறை ரேஷன்கடை கட்டடத்தை பராமரிக்க வேண்டி, ஒன்றிய நிர்வாகம், எம்.எல்.ஏ., மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.மழைக்காலங்களில், கட்டடத்தின் மேற்பகுதியில் தேங்கும் நீரால், சுவர்கள் ஈரமாவதுடன், கட்டடத்துக்குள் நீர் கசிவு ஏற்பட்டு, அத்தியாவசிய பொருள்கள் நனைந்தது.ஆபத்தான கட்டடத்தை கைவிட்டு, நுாலக கட்டடத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்கின்றனர். செயல்படாத ரேஷன் கடை கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X