வால்பாறை:வால்பாறை அருகே அரசு பள்ளி கட்டடத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தின.வால்பாறையில் தென்மேற்கு பருவமழைக்கு பின், வனவளம் செழிப்பாக இருப்பதால், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறைக்கு, 80க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) இரண்டாம் பிரிவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள் பள்ளி வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தியது. அதன் பின், பள்ளி ஆடிட்டோரியம் மற்றும் சத்துணவு கூடத்தையும் இடித்து சேதப்படுத்தியது. அடிக்கடி காட்டுயானைகள் பள்ளிக்கு 'விசிட்' செய்வதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.