பொது செய்தி

தமிழ்நாடு

கான்கிரீட் ரோடு சேதம் சீரமைக்க வலியுறுத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள நெ.10 முத்துாரில் மயானம் செல்லும் கான்கிரீட் ரோடு சிதலமடைந்து காணப்படுகிறது.நெ.10 முத்துாரில், கிராம சேவை மையம் எதிரில், மயானம் செல்லும் கான்கிரீட் ரோடு கடந்த, 9 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.இந்த ரோடு பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாததால், பழுதடைந்துள்ளது. இவ்வழியாக லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் செல்வதால், கான்கிரீட் ரோடு முற்றிலும் சிதலமடைந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் சென்று வருவது சிரமமாக உள்ளது. இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக கொண்டு செல்லவும், மக்கள் சிரமப்படுகின்றனர்.கான்கிரீட் ரோட்டை ஒட்டி ஓடை செல்வதால், தடுப்பு சுவர் அமைத்த பின், கான்கிரீட் ரோடு போட்டால் மட்டுமே, ரோடு பழுதடையாமல் இருக்கும். இதற்கு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X