பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் விளக்கு திருட்டு கண்காணிப்பு வேண்டும்

Added : நவ 29, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஊராட்சிகளில், அடிக்கடி சோலார் விளக்குகள் மற்றும் பேட்டரிகள் திருடப்படுகிறது. இதனை தடுக்க வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகளில் அதிகளவில் மின் சிக்கனத்துக்காக சோலார் விளக்கு மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்விளக்கு மற்றும் பேட்டரிகளை மர்மநபர்கள் திட்டமிட்டு திருடி செல்கின்றனர். இதனால், அடிக்கடி சோலார் விளக்குகள் மற்றும் பேட்டரிகள் காணாமல் போகிறது.அதன் பின், தெருவிளக்குகள் புதிதாக அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கிராமங்கள் இருளில் மூழ்கி விடுகின்றன.இதனை தடுக்கவும், கிராமத்தில் சந்தேப்படும்படியான நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வீதிகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க ஊராட்சிகள் நடவடிக்கை எடுத்தால், திருட்டினை தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X