கால்நடை திருடும் கும்பல்: விவசாயிகள் புகார்

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சி:'கால்நடைகளை திருடும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தமிழக விவசாயிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், டி.கோட்டாம்பட்டி நால்வர் மடத்தில் நடந்தது. துணைத்தலைவர் கோபால்ரத்தினம் தலைமை வகித்தார். பொருளாளர் ஆறுசாமி முன்னிலை வகித்தார். அமைப்பாளர்கள் கந்தவடிவேல், மயில்சாமி, மோகன சுந்தரம் மற்றும் பலர் பேசினர். தாலுகா துணைச் செயலாளர் சவுந்தரராஜ் நன்றி கூறினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தஞ்சையில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்தவரை மன்னிக்க கூடாது; தக்க தண்டனை வழங்க வேண்டும். சொட்டு நீர் பாசன வசதிக்கான உதவித்தொகையை சிறு, குறு விவசாயி என பாகுபாடு செய்யாமல் எல்லா விவசாயிகளுக்கும் முழு செலவுத்தொகையை வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலின் வாழ்வாதாரமாக ஆடு, மாடு மற்றும் கோழி, கால்நடைகள் விளங்குகிறது. விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை சில கும்பல்கள் திருடிச் செல்கின்றன. கும்பலை பிடிக்கவும், களவுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் தென்னை, வாழை, கரும்பு, நிலக்கடலை மற்றும் நெல் முதலான எல்லா தோட்டப்பயிர்களுக்கும், அரசு மானிய உதவி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X