ஆனைமலை:பொள்ளாச்சி, சிங்காநல்லுார் அருகே, தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில், அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம், நேற்று முன்தினம், நான்கு மாணவர்களுடன் சிங்காநல்லுார் சென்றது.அப்போது, மீன்கரை ரோட்டில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் ரோட்டில், ஒரு வளைவில் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.வாகனம் மிதமான வேகத்தில் சென்றதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.ரோட்டோரத்தில் உள்ள பள்ளத்தில் மண் கொட்டி சமப்படுத்தப்படாமல், பாதுகாப்பு தடுப்புக்கள் அமைக்காமல் இருந்ததால் விபத்து ஏற்பட்டது. ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.