சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கக்கன் மருமகள் போலீசில் புகார்

Added : நவ 29, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், முன்னாள் அமைச்சர் கக்கனின் மருமகள் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.முன்னாள் அமைச்சர் கக்கனின் மகனான, ஓய்வு பெற்ற எஸ்.பி., காசி விஸ்வநாதனின் மனைவி பூமாலை, 65, பழநியில் வசிக்கிறார்.இவர், கிழக்கு போலீசில் கொடுத்துள்ள புகாரில், 'பழநியை சேர்ந்த சிவமணி, சுபாஷ், ராஜா, பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிஹரன், சாது ஆகியோர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், முன்னாள் அமைச்சர் கக்கனின் மருமகள் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.முன்னாள் அமைச்சர் கக்கனின் மகனான, ஓய்வு பெற்ற எஸ்.பி., காசி விஸ்வநாதனின் மனைவி பூமாலை, 65, பழநியில் வசிக்கிறார்.
இவர், கிழக்கு போலீசில் கொடுத்துள்ள புகாரில், 'பழநியை சேர்ந்த சிவமணி, சுபாஷ், ராஜா, பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிஹரன், சாது ஆகியோர் பொள்ளாச்சியில் கடந்த, 2014ம் ஆண்டு, சீட்டு நிதி நிறுவனத்தில், போலி கையெழுத்து போட்டு; போலி ஆவணங்களை தயார் செய்து, மோசடி செய்து, தனது சொத்துகளை அபகரிக்க முயல்வதாக,' தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கிழக்கு போலீசார், போலி ஆவணம் தாக்கல் செய்து மோசடி செய்ததாக, ஐந்து பேர் மீதும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் விசாரித்த பிறகே, முழு விபரம் தெரியவரும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X