பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பல மாவட்டங்கள் அடுத்தடுத்து உதயம்

Updated : நவ 30, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (19)
Advertisement
தமிழகத்தில் பல மாவட்டங்கள் அடுத்தடுத்து உதயம்

தமிழகத்தில், அடுத்தடுத்து பல மாவட்டங்கள் உதயமாகி வருகின்றன. நேற்று, 37வது மாவட்டமாக, செங்கல்பட்டு மாவட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு பின், மேலும், மூன்று புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; வேலுார் மாவட்டத்தில் இருந்து, ராணிப்பேட்டை, திருப்பத்துார்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு என, ஐந்து மாவட்டங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன.

இம்மாவட்டங்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., நேரடியாக சென்று, அவற்றை துவக்கி வைத்தார்.நேற்று, 37வது மாவட்டமாக, செங்கல்பட்டு மாவட்டத்தை துவக்கி வைத்தார். புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, மேலும் பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு எனும் புதிய மாவட்டம் தமிழகத்தின் 37வது மாவட்டமாக வௌ்ளியன்று உதயமானது. வேண்பாக்கம் கிராமத்தில் நடந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம், அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர்.


சிறிதாகிவிட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செய்யாறை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், புதிதாக உருவாக்கப்பட்ட பின், காஞ்சிபுரம் மாவட்டம் சிறிதாகி விட்டது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செய்யாறு, வந்தவாசி சட்டசபை தொகுதிகளை, காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைப்பது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


கோரிக்கை மனு



ஆனால், அப்பகுதி மக்கள், தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, அமைச்சர்கள் மற்றும் முதல்வர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்துஉள்ளனர். முதல்வரின், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துாரை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சின்னதம்பி, ஜனவரி மாதம், சட்டசபையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், 'கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார்.

எனவே, அப்பகுதி மக்கள், புதிய மாவட்ட அறிவிப்பை, எதிர்பார்த்தபடி உள்ளனர். அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள, கும்பகோணத்தை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு. இதுவும் பரிசீலனையில் உள்ளதாக, சட்டசபையில், ஏற்கனவே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தை பிரித்து, பொன்னேரி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கையும் உள்ளது. புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற குரல், பரவலாக எழுந்துள்ளதால், அதுபற்றி ஆராய, அரசு விரைவில் குழு அமைக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-நவ-201918:02:15 IST Report Abuse
Lion Drsekar திநகர் மாவட்டம், சைதாப்பேட்டை மாவட்டம், கிண்டி மாவட்டம் கூட ஆரம்பிக்கலாம், பல லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும் . ஒரே ஒரு ஆலைவைத்துக்கொண்டு சேஷன், தேவாரம் போன்று திறமை மிக்க ஒரே ஒரு நபரை வைர்த்துக்கொண்டு ஒட்டு மொத்த நாட்டையும் சீரும் சிறப்புமாக ஆளலாம்?வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
கார்த்திகேயன் தாரணி அப்படியே அந்த கடலூர் ஐயும் பிரித்து சிதம்பரம் மாவட்டம் விருத்தாசலம் மாவட்டம் என்று ஆக்கி விடுங்கள்... 😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
30-நவ-201915:20:33 IST Report Abuse
Rengaraj லோக் சபா மற்றும் சட்ட சபை தொகுதிகள் அந்த அந்த மாவட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு தோகுதி வரையறை சீரமைக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும். இதனால் ஒரு எம்.பி அல்லது ஒரு எம்.எல்.ஏ இரண்டு மாவட்ட அதிகாரிகளை , கலெக்டர்களை கண்ட்ரோல் செய்ய முடியாது. இதற்கு தேர்தல் கமிஷன் தனியாக செயல்பட வேண்டும். ஒரு மாவட்ட வளர்ச்சி பணிகள் என்றால் அந்த தொகுதி எம்.பி , அந்த மாவட்ட எம்.எல்.ஏக்கள், கலெக்டர், இவர்கள் பணி ஒன்றிணைக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X