பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமிகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை அப்போலோ டாக்டர்கள் அசத்தல்

Added : நவ 29, 2019
Share
Advertisement
மதுரை :தென் மாவட்டங்களில் முதன்முறையாக பெற்றோரிடம் கல்லீரலை தானமாக பெற்று, இரு சிறுமிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அப்போலோ டாக்டர்கள் அசத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவாகாசியை சேர்ந்த இரு சிறுமிகள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டனர். மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும் டாக்டர்கள்

மதுரை :தென் மாவட்டங்களில் முதன்முறையாக பெற்றோரிடம் கல்லீரலை தானமாக பெற்று, இரு சிறுமிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அப்போலோ டாக்டர்கள் அசத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவாகாசியை சேர்ந்த இரு சிறுமிகள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டனர். மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்தபோது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது தெரியவந்தது.ஒரு சிறுமிக்கு தாயும், இன்னொரு சிறுமிக்கு தந்தையும் கல்லீரல் தானம் கொடுத்தனர். அரசின் ஒப்புதல் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதை டாக்டர்கள் மனிஷ் வர்மா, மதுசூதனன், சசிதர், ஆனந்த் ராமமூர்த்தி, மஞ்சுநாத், ரகுவம்சி சைத்ரா மேற்கொண்டனர். டாக்டர்கள் முருகன் ஜெயராமன், ராஜேஷ் பிரபு, பத்ம பிரகாஷ், லெனின் உதவினர். மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் பாராட்டினார்.டாக்டர்கள் கூறியது:மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை கல்லீரல் மாற்று சிகிச்சை தான். சென்னையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. முதன்முறையாக தென்மாவட்டங்களில் இரு சிறுமிகளுக்கு செய்துள்ளோம். இளவயது பெற்றோரே தங்களின் கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக தந்தனர். இச்சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. கல்லீரல் நோய்க்கு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. இதுபற்றிய விழிப்புணர்வு தேவை. உயிரோடு இருக்கும் போது கல்லீரல் தானம் செய்வதால் எப்பாதிப்பும் இல்லை, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X