மடத்துக்குளம்:வெங்காய விலை உயர்வை கண்டித்து, மடத்துக்குளம் நால்ரோட்டில் மா.கம்யூ., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.மடத்துக்குளம் தாலுகா மா.கம்யூ., சார்பில் நால் ரோடு பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய அரசைக்கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இதில், ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'சமையலுக்கு அடிப்படை தேவையாக வெங்காயம் உள்ளது. இதன் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது, 150 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வெங்காயம் விவசாயிகளிடம் மிக மலிவான விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், விற்பனை விலை பல மடங்காக உள்ளது. சட்ட விரோதமாக உணவு பொருளை இருப்பு வைத்து விலையை அதிகரிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.