பொது செய்தி

தமிழ்நாடு

'குட்டீஸ்'கள் நலனுக்காக சிறப்பு திட்டங்கள் 'டிஜிட்டல்' அங்கன்வாடி!

Added : நவ 29, 2019
Advertisement
 'குட்டீஸ்'கள் நலனுக்காக சிறப்பு திட்டங்கள் 'டிஜிட்டல்' அங்கன்வாடி!

உடுமலை:-உடுமலை கோட்ட அங்கன்வாடி மையங்கள் மேம்பாட்டில், ஒரு கட்டமாக, குழந்தைகளின் எடை, உயரம் துல்லியமாக அறிய 'டிஜிட்டல் கருவிகள்' வழங்கப்பட்டுள்ளன.உடுமலையில், 143, குடிமங்கலத்தில், 75 மற்றும் மடத்துக்குளத்தில், 77 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. மையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளின் உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி, நலக்குறைபாடுகள், அந்தந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு கண்டறியப்படுகிறது.இவ்வாறு குழந்தைகளின் நலத்தை அளவிடுவதற்கு எடையை மையமாக வைத்து, கணக்கிடும் முறை நடைமுறையில் இருந்தது. எடை அறிவதற்கு, வழக்கமான நொடி முள் எடையை குறிக்கும் கருவிதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கருவியை பயன்படுத்துவதில், பல்வேறு பிரச்னைகளும் உள்ளன.நடப்பாண்டில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நவீன மயமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதிவேடுகள் மற்றும் குழந்தைகளை பற்றி விபரங்களுக்கு, 'மொபைல் போன்' 'ஆப்' பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மொபைல்போன்களை பயன்படுத்துவது குறித்து, பணியாளர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, குழந்தைகளுக்கான எடை மற்றும் உயரம் கண்டறிவதற்கு, டிஜிட்டல் கருவி உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டார அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட்டுள்ளன.டிஜிட்டல் முறையில் செயல்படும் இக்கருவி, குழந்தைகளின் எடையை, துல்லியமாக காட்டுகிறது. கடந்தாண்டு வரை, 'டேப்' மூலமாக குழந்தைகளின் உயரம் கணக்கிடப்பட்டு வந்தது. நடப்பாண்டில், இதற்கும் டிஜிட்டல் கருவி வழங்கப்பட்டுள்ளது.மையங்களில், இதன் மூலம், எடை மட்டுமின்றி உயரத்தை கொண்டும் குழந்தைகளின் உடல்நலம் அளவீடு செய்யும் வழிமுறை பின்பற்றப்படுகிறது. குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா கூறியதாவது: உயரத்துக்கேற்ப எடை இல்லாமல், குறைவாக இருப்பவர்கள், மிகக் குறைவாக இருப்பவர்கள், மற்றும் வயதுக்கேற்ப உயரம் இல்லாமல், குறைவாக, மிகக் குறைவாக இருப்பவர்கள் என்ற முறையில் ஒவ்வொரு பிரிவுகளாக கணக்கிடப்படுகிறது.
இவர்களுக்கு, முதற்கட்டமாக, குறைபாடு இருப்பதன் காரணம் கண்டறியப்பட்டு, அதற்கான மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.தொடர்ந்து கூடுதல் கவனிப்புடன், சத்துள்ள சிற்றுண்டி, கூடுதல் வேளை உணவு வழங்கப்படுகிறது. இவ்விரண்டு பிரிவுகளிலும் குறைவாக இருப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும், மிகக் குறைவுநிலையில் இருப்பவர்கள், வாரம் ஒருமுறையும், மற்ற குழந்தைகள் மாதம் ஒருமுறையும் எடை மற்றும் உயரம் அளவிடப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X