கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாட்சி வாக்குமூலம் வீடியோ பதிவு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 29, 2019
Advertisement

மதுரை :சாட்சிகள் பிறழ்சாட்சியமாக மாறுவதை தடுக்க வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவில் பதிவு செய்யும் நடைமுறையை மாநிலத்தில் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஏற்கனவே ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு உத்தரவு:கிரிமினல் வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறுவதால், குற்றவாளிகள் விடுதலையாகின்றனர். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி சாட்சிகளிடம் விசாரிக்கும்போது, அதை ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்யும் நடைமுறைக்கு 2009 முதல் அரசு வழிவகை செய்தது. அது வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவில் பதிவு செய்தால், பிறழ்சாட்சிகளாக மாறும்பட்சத்தில் அப்பதிவை அவர்களிடம் காண்பித்து உறுதி செய்யலாம். வீடியோ, ஆடியோவில் வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி கருத்து தெரிவிக்கலாம். உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் சங்கங்கள் ஆலோசனைகளை முன்வைக்கலாம் என்றனர்.அடுத்த விசாரணையின் போது மதுரை போலீஸ் ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆஜராகினர். அரசுத் தரப்பு மற்றும் சில வழக்கறிஞர்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.நேற்று நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு உத்தரவு:குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு (சி.ஆர்.பி.சி.,161) படி சில முக்கிய வழக்குகளில் வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவில் பதிவு செய்யும் நடைமுறையை போலீசார் பின்பற்றுகின்றனர்.இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதில் தற்போது இந்நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை.குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு (சி.ஆர்.பி.சி.,164)படி மனித உடலுக்கு தீங்கிழைக்கும் அனைத்து குற்ற வழக்குகள், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குளில் காயமடைந்தவர்கள், சாட்சிகளிடம் வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவில் பதிவு செய்ய வேண்டும். அதே நடைமுறையை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அவசியம் பின்பற்ற வேண்டும். மாநிலத்தில் அனைத்து மாஜிஸ்திரேட், மகளிர் மற்றும் அமர்வு நீதிமன்றங்களில் வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளதை தமிழக அரசு 3 மாதங்களில் உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்யும் வீடியோ, ஆடியோ 'டேட்டாக்'களை பாதுகாக்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இது கடும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் மேல்முறையீட்டு விசாரணையின்போது, தகுந்த ஆதாரமாக அமையும்.சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் 2019 ல் முடிகிறது. அதை நிறைவேற்ற மற்றும் இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு 2020 ஏப்.,1ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X