பொது செய்தி

இந்தியா

சாகச ஜீப் சவாரிக்கு இடுக்கியில் கட்டுப்பாடு

Added : நவ 29, 2019
Advertisement

மூணாறு:கேரளா, இடுக்கியில் வாகமண், ராமக்கல்மேடு, குமுளி, சின்னக்கானல் ஆகிய பகுதிகளில் சாகச ஜீப் சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இடுக்கி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலோனோர் வனப்பகுதிகளில் கரடுமுரடான ரோட்டில் அதிவேகமாக ஜீப்புகளில் செல்லும் சாகச பயணித்தை விரும்புகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.அதனை கட்டுப்படுத்தும் வகையில் இடுக்கி கலெக்டர் தினேஷன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.கட்டுப்பாடுகள் சவாரிக்கு பயன்படுத்தும் ஜீப்புகளுக்கு, இடுக்கி இணை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அந்த சான்றிதழை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.டிரைவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும். அதற்கு மாவட்டத்தில் டிச.,1 முதல் 5 வரை பதிவு செய்து கொள்ளலாம். டிரைவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம். ஜீப்புகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். சுற்றுலா பகுதிகளில் ஜீப் சவாரிக்கு என மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழகம் சார்பில் தகவல் மையங்கள், டிக்கெட் கவுன்டர்கள் துவங்கப்படும். அதற்கான கட்டணம் நிர்ணயித்து, எலக்ட்ரானிக் போர்டு மூலம் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள், கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X