மாணவர்களுக்கான யோகாசன போட்டி:30 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்பு

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, சாய்ராம் யோகாலயா சார்பில், பள்ளி மாணவர்களுக்கான யோகாசனப் போட்டிகள் நேற்று நடந்தது.உடுமலை, சாய்ராம் யோகாலயா சார்பில், ராஜாவூர் ராமச்சந்திரா ஆசிரமத்தில் யோகாசன போட்டிகள் நடந்தன. போட்டியில், பழநி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து, 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டிகளை, அபேனந்தா சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார். பொது ஆசனங்கள் மற்றும் தனித்திறன் வெளிப்படுத்துதல் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன.போட்டிகளை, உடுமலை 'ஹாட் புல்நஸ்' அமைப்பு மற்றும் சாய் யோகாலயா ஒருங்கிணைந்து நடத்தியது. நிகழ்ச்சிகளை, யோகா ஆசிரியர் காளிமுத்து ஒருங்கிணைத்தார். பொதுப்பிரிவு போட்டிகளில், பழநி, ரெயின்போ பள்ளி மாணவர்கள் முதலிடம், பொள்ளாச்சி வி.வி.எம்., பள்ளி இரண்டாமிடம், கொழுமம், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மூன்றாமிடமும் பெற்றனர்.தனித்திறன் வெளிப்படுத்துதல் போட்டியில், உடுமலை, ஆர்.ஜி.எம்., பள்ளி முதலிடம், புஷ்பத்துார் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர் இரண்டாமிடம், உடுமலை, வி.ஏ.வி., பள்ளி மாணவர்கள் மூன்றாமிடமும் பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில், சிறப்பாக ஆசனம் செய்த மாணவர்கள், இலவசமாக, ஐதராபாத்தில் உள்ள ராமச்சந்திரா மிஷனுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X