திண்டிவனம் : திண்டிவனம் அருகே காட்டுசிவிரி கிராமத்தில், கருவி மூலம் களை எடுத்தல் குறித்து, செயல் விளக்கம் நடந்தது.
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில், திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லுாரி மாணவிகள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்று வருகின்றனர். திண்டிவனம் அடுத்த காட்டுசிவிரி கிராமத்தில், திருந்திய நெல் சாகுபடி முறையில், கோனோவீடர் கருவி மூலம், களை எடுத்தல் குறித்து, விவசாயிகளுக்கு நேரடி செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
புதிய கருவி மூலம் களை எடுத்தால், வேர்களில் வெட்டு விழுவதால், நல்ல காற்றோட்டமும், நுண்ணுயிர் செயல்பாடும் அதிகமாக இருக்கும், மண்ணின் இறுக்கம் குறையும் என சங்கீதா தலைமையில் வந்திருந்த மாணவியர்கள் மோனிஷா, பவித்ரா, நாகஜோதி, நந்தினி, நிஷா உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.