உடுமலை பகுதிகளில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:உடுமலை பகுதிகளில், மீண்டும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதலே, கன மழை பெய்து வந்தது.உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளதால், பருவ மழைகளே ஆதாரமாக உள்ளன. நடப்பு ஆண்டு, கோடை மழை, 110.8 மி.மீ., பெய்து, இயல்பை விட குறைந்தது.தென்மேற்கு பருவ மழை, இயல்பை விட அதிகரித்து, 218.40 மி.மீ., பெய்தது. அக்., முதல் டிச., வரையிலான, வட கிழக்கு பருவ மழை காலத்தில், அக்.,மாதத்தின் இயல்பான மழையளவு, 147.70 மி.மீ., ஆக உள்ள நிலையில், கடந்த மாதம், 234.2 மி.மீ., பெய்தது.நவ., மாதத்தின் இயல்பான மழையளவு, 120 மி.மீ., ஆக உள்ள நிலையில், நடப்பு மாதம், மழை குறைந்தே காணப்பட்டது. கடந்த இரு நாட்களாக, மீண்டும் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது.நேற்றுமுன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருமூர்த்தி அணைப்பகுதியில், 6 மி.மீ.,; நல்லாறு அணைப்பகுதி,10 மி.மீ.,; அமராவதி அணைப்பகுதியில், 8 மி.மீ.,; மடத்துக்குளத்தில், 9 மி.மீ., மழை, பெதப்பம்பட்டி, 6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.நடப்பு மாதத்தில், உடுமலையில், ஒன்பது நாட்களில், 52.60 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று காலை முதலே, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கன மழை பெய்து வந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X