பொது செய்தி

தமிழ்நாடு

மத்தள பள்ளத்தில் தடுப்பணை கட்டணும்: விவசாயிகள் வலியுறுத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:மழைக்காலத்தில் மத்தளபள்ளத்தில், வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்டினால், பொன்னாலம்மன்சோலை பகுதி முழுவதும் பயன்பெறும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில், பொன்னாலம்மன்சோலை பகுதி அமைந்துள்ளது. சோலை பகுதிக்கும், மேற்குத்தொடர்ச்சி மலைக்கும், இடையே திருமூர்த்தி அணைக்கு வரும் காண்டூர் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் கட்டப்படும் முன்பு, மழைக்காலத்தில், மத்தளபள்ளம் எனப்படும் மழை நீர் ஓடையில், அதிகளவு தண்ணீர் சென்று, பாலாற்றுடன் இணையும்.காண்டூர் கால்வாய் கட்டப்பட்ட பிறகு, மலையிலிருந்து வரும் தண்ணீர், மத்தள பள்ளத்துக்கு செல்ல, 'அன்டர் டனல்' எனப்படும் கீழ்மட்ட கால்வாய் அமைக்கப்பட்டது. காண்டூர் கால்வாய் கசிவு, நிலையான பருவமழை உட்பட காரணங்களால், அப்பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படாமல், விவசாய சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைத்து வந்தது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்டு கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் பாலாறு பல மாதங்கள் தண்ணீரின்றி வறண்டு விடுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், 4 சதுர மைல், அளவுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டுள்ள மத்தள பள்ளத்தில், மழைக்காலத்தில், வினாடிக்கு, 2,600 கன அடி வரை தண்ணீர் வெளியேறுகிறது.இப்பள்ளம், காண்டூர் கால்வாயின், 45.4 வது கி.மீ., ல், குறுக்கிடுகிறது. இந்த பள்ளத்தில், மழைக்காலத்தில், செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க எந்த இடத்திலும், தடுப்பணைகள் இல்லை.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'மலையடிவாரத்தில், சமவெளி இல்லாமல், மேடும், பள்ளமுமான பகுதியில், விவசாயம் செய்து வருகிறோம். மழைக்காலத்தில், வெள்ளம் சென்று, விளைநிலங்கள் பாதிக்கப்படுவதும், குறுகிய நாட்களில், நிலத்தடி நீர் மட்டம் சரிவதும் தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, மத்தள பள்ளம், பாலாறு உட்பட நீராதாரங்களின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X