பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வராத கிராம சேவை மையங்கள்: தனியார் சேவையில் மக்கள் அலைக்கழிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:கிராம சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வராததால், தனியார் சேவையில் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு, அரசு திட்டங்களுக்காக அதிக செலவிடும் நிலை தொடர்கிறது.தமிழக அரசு, பல்வேறு அரசுத்துறை சார்ந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் ஆகிய நடைமுறைகளை கணினிமயப்படுத்தி வருகிறது. எனவே, கிராம மக்கள், வருவாய்த்துறை சான்றிதழ்கள், வேளாண்துறை மானியத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க, அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில், கட்டமைப்பு வசதிகள் குறைவு உட்பட காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, குறைவான நபர்களுக்கு மட்டுமே சேவைகள் அளிக்கப் படுகிறது. கிராமப்புற மக்களுக்கான இ-சேவையை அதிகரிக்க, மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கிராமந்தோறும், கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன.இந்த மையத்தில், அரசுத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான சேவைகள் வழங்கப்படும்; ரயில் முன்பதிவு போன்ற இதர சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படும் என திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.சேவை மைய கட்டடத்துக்கு, வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தலா, 14 லட்சம் ரூபாய், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கட்டட பணிகள் நிறைவு பெற்று பல ஆண்டுகளாகியும், கிராம சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.கம்ப்யூட்டர் உட்பட உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யாதது; ஆட்கள் நியமனம் உட்பட பிரச்னைகளால், கிராம சேவை மையங்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களிலுள்ள, 61 ஊராட்சிகளிலும், சேவை மைய கட்டடங்கள் பரிதாப நிலைக்கு மாறி வருகின்றன; மக்களும் நகரங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, வேதனைக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிராம சேவை மைய கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறந்து, அனைத்து வகை சேவைகளும் மக்களுக்கு கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X