பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் சாலை தடுப்பு அவர்

Added : நவ 29, 2019
Advertisement
 விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் சாலை தடுப்பு அவர்

விழுப்புரம் : விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், ஆபத்தான முறையில் சாலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் நகர எல்லைப் பகுதியான திருநகர், கம்பன் நகர் ஆகியவற்றின் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதியில் சாலைப் பணி நடைபெறுவது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை.தடுப்புச் சுவரில் சுண்ணாம்பு மற்றும் கறுப்பு, வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், வேகமாக வரும் வாகனங்கள், சாலை தடுப்புச் சுவர் இருப்பதை அறியாமல், விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

வருமுன் காப்போம்:விழுப்புரம் எம்.பி., யாக இருந்த ராஜேந்திரன், கடந்த பிப்.23 ம் தேதி காலை, திண்டிவனம், ஜக்காம்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து, சென்னைக்கு காரில் புறப்பட்டார்.திண்டிவனம் மேம்பாலம் சாலை பிரியும்போது தடுப்புக் கட்டையில் கார், மோதிய விபத்தில், எம்.பி., ராஜேந்திரன் பலத்த அடிபட்டு இறந்தார். விபத்து நடப்பதற்கு முதல்நாள், திண்டிவனம் நகர எல்லையில், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக,எம்.பி., விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த, 'பேரி கார்டு'களை, வரவேற்பு இடத்திற்கு எடுத்து் சென்றனர்.

அந்த பேரி கார்டுகளை, மீண்டும் அதே இடத்தில், வைத்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.இதேபோல், விழுப்புரத்தில் மற்றொரு விபத்து நிகழாமல் தடுப்பதற்கு, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X