மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.மாற்றுத்திறனாளிகள் தினம் டிச., 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உடுமலை கல்வி மாவட்ட அளவில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் நேற்று நடந்தது.போட்டிகள், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளிலிருந்து, 20 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.இதில், நின்ற இடத்தில் தாவுதல், பந்து எறிதல் மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X