அழிகிறது அமேசான்: சூழல் ஆர்வலர்கள் கொதிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

பிரேசிலியா அமேசான் காடுகள் அழிவது அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரேசில் அதிபர் பொலசொனாரோவுக்கும் இடையே வார்த்தைப்போரும் மூண்டது. இந்நிலையில் அமேசான் காடுகளின் அழிப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அமேசான் காடுகளின் நிலை குறித்து சிறப்பு அறிக்கையை வெளியிட்டது.அதில் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் 10100 சதுர கி.மீ. பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகம். 2017- ஆகஸ்ட் முதல் 2018 ஜூலை வரையிலான 7033 சதுர அடி அழிக்கப்பட்டன.இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை அடுத்து காடுகளை காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். காடுகளே நாட்டின் பலம். மரங்கள் அழிவது மனித இனம் அழிவதன் முன்னறிவிப்பு. உடனடியாக காடுகளை காப்பாற்றவும் சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X