அரசியல் செய்தி

தமிழ்நாடு

37வது மாவட்டமானது செங்கல்பட்டு

Updated : நவ 30, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
செங்கல்பட்டு: தமிழகத்தின், 37வது மாவட்டமாக, செங்கல் பட்டு நேற்று உதயமானது. அதை துவக்கி வைத்த முதல்வர் இ.பி.எஸ்., ''இம்மாவட்டத்தில், மூன்று தடுப்பணைகள் கட்டப்படும்,'' என, அறிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், உதயமானது. தமிழகத்தின், 37வது மாவட்டமான செங்கல்பட்டு துவக்க விழா, வேண்பாக்கம், ஐ.டி.ஐ., கல்லுாரி வளாகத்தில்,

செங்கல்பட்டு: தமிழகத்தின், 37வது மாவட்டமாக, செங்கல் பட்டு நேற்று உதயமானது. அதை துவக்கி வைத்த முதல்வர் இ.பி.எஸ்., ''இம்மாவட்டத்தில், மூன்று தடுப்பணைகள் கட்டப்படும்,'' என, அறிவித்தார்.latest tamil news


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், உதயமானது. தமிழகத்தின், 37வது மாவட்டமான செங்கல்பட்டு துவக்க விழா, வேண்பாக்கம், ஐ.டி.ஐ., கல்லுாரி வளாகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், நேற்று நடந்தது. தலைமை செயலர் சண்முகம் வரவேற்றார்.புதிய மாவட்டத்தை துவக்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முதல்வர் இ.பி.எஸ்., பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


latest tamil newsபின், முதல்வர் பேசியதாவது:புதிய செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏரிகள், சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளன. இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, அரசு துணை நிற்கும். செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரிக்கு, 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

நகராட்சி, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி துறைகள் வாயிலாக, 600 கோடி ரூபாய் மதிப்பில், 300 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. ஒரத்துாரில், நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நீர்த்தேக்கத்தில், 1.3 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், இரும்புலிச்சேரி கிராமத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணையும்; திருப்போரூர் தாலுகா, பஞ்சந்திருத்தி, பண்டிதமேடு பகுதிகளில், தலா, 5 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு தடுப்பணைகளும் கட்டப்படும்.

இப்படி இருக்கும் நிலையில், அரசின் திட்டங்களுக்கு, சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். 'புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, வார்டு வரையறை இல்லை; அ.தி.மு.க., அரசு தேர்தலை நிறுத்த முயல்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். 'வார்டு வாரியாக தேர்தல் நடத்துவது தான் சிறப்பானது' என, தி.மு.க., ஆட்சி காலத்தில், ஸ்டாலின் கூறினார். இதை தான் நாங்கள், தற்போது அறிவித்துள்ளோம். நீங்கள் அறிவித்தால் சரி; நாங்கள் அறிவித்தால் தவறா?

கிராமம்தோறும் சென்று, 'உள்ளாட்சி தேர்தலை, அரசு நடத்தவில்லை. தேர்தல் நடத்த திராணி இல்லை' என பேசினார். தேர்தலை அறிவித்தால், எதிர்கொள்ள நாங்கள் தயார்; அதற்கான துணிவு, அ.தி.மு.க.,வுக்கு இருக்கிறது. ஆனால், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த, தி.மு.க., முயற்சிக்கிறது. தேர்தல் குறித்த வழக்கு, தி.மு.க., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதிய மாவட்டம் பிரிப்பதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் ஆணையமும், இதை தெளிவுபடுத்தி உள்ளது. அ.தி.மு.க., அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு சென்றுள்ளன. அதன் விளைவாக, ஸ்டாலின், தேர்தலை கண்டு அஞ்சுகிறார்.கடந்த, 2018ல், வரையறுக்கப்பட்ட, வார்டு அடிப்படையில் தான் தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் தெளிவாக குறிப்பிட்டுஉள்ளது. குழப்பம் எல்லாம், ஸ்டாலினிடம் தான் உள்ளது; மற்ற கட்சிகளிடம் இல்லை. இவ்வாறு, முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், இலவச கொசு வலை வழங்கும் திட்டத்தை, முதல்வர் அறிவித்தார். ''4 அடி அகலம், 4 அடி நீளத்தில், நைலான் துணியிலான கொசு வலை, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயகுமார், பெஞ்சமின், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லுாயிஸ். அ.தி.மு.க., மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்டலப்பாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலர் ஆனுார் பக்தவத்சலம் பங்கேற்றனர்.

உடன், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் சல்குரு, முன்னாள் எம்.பி., மரகதம், முன்னாள் எம்.எல்.ஏ., தனபால், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலர் நாவலுார் முத்து, மாவட்ட செயலர் வேலாயுதம் உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-நவ-201914:56:19 IST Report Abuse
Endrum Indian 37 மாவட்டம் இன்னும் கொஞ்ச நாட்களில் 52 மாவட்டங்களாக பிரிக்கப்படும் அப்போது தான் வாரத்துக்கு ஒரு தடவை இந்த கமிஷன் இந்த மாவட்டத்திலிருந்து வரவேண்டும் என்று வரையறை சொல்லமுடியும் அல்லவா??மக்களுக்கான வசதி பெருகாது வெறும் கவுன்சிலர்கள் அதிகமாவார்கள் அப்படித்தானே???
Rate this:
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
30-நவ-201909:31:14 IST Report Abuse
Ramachandran Rajagopal .மக்கள் ஆறு அடிவரை இருக்கும் நிலையில் நான்கடிக்கு நான்கடி கொசு வலை கொடுத்தால் கொசுவிற்குத்தான் பலன் என்பதை இவர்கள் உணரவில்லை.இந்த கொசுவலை குழந்தைகளுக்குத்தான் பயன்படும்.
Rate this:
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201901:30:33 IST Report Abuse
R.PERUMALRAJA ஒருவர் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு அந்த கட்சியின் அசைக்க முடியாத தலைவராக வரவேண்டும் என்று நினைத்தால் ....அவர் ....1.புது புது மாவட்டங்களை அறிவிப்பார் ....2 . மாற்று காட்சிகளில் இருந்து வெளியேறுபவர்களை அவர் முன்னிலையில் கட்சியில் இணையவைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார் 3 . நடிகர்களையும் இதே போல் வரவேற்று அவர் முன்னிலையில் இனைய வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார் ....4 . நாள் தோறும் பல்வேறு சங்கங்களை நன்றி சொல்ல வைப்பார் அதையும் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பத்திரிக்கையில் வெளியிடுவார் ...5 . பல்வேறு பாராட்டுவிழாக்களை நடத்துவார் / நடத்த வைப்பார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X