உடுமலை:உடுமலை பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.உடுமலை அபெக்ஸ் சங்கம் மற்றும் சக்ரா மருத்துவமனை சார்பில், இக்கருத்தரங்கு நடந்தது. அபெக்ஸ் சங்கத்தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். சக்ரா மருத்துவமனை டாக்டர் சவிதா, வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை, அதற்கான தீர்வுகள், உணவு முறைகள், சுகாதார முறைகள் குறித்து மாணவியரிடையே பேசினார். காணொளி காட்சிகள் மூலம், மாணவிகளின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார். கருத்தரங்கில், 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். அபெக்ஸ் சங்க நிர்வாகிகள் சுப்புராமன், கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE