அமராவதி பாசன சபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடி

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:அமராவதி பாசன சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், பல்வேறு குளறுபடிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.அமராவதி பழைய மற்றும் புதிய பாசன சபைகளுக்கான, நிர்வாகக்குழு தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நீர்நிர்வாகம், பாசன வாய்க்கால் பராமரிப்பு, பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு, குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதில், பாசன சபை நிர்வாகக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த, 2014ல் பாசன சபைகளுக்கான தேர்தல் நடந்தது; வரும், ஜன., மாதத்துடன், நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. வரும், 2020 மார்ச் மாதத்தில், பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்த, பொதுப்பணித்துறை ஏற்பாடுகளை துவக்கியுள்ளது.பாசன சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல், தவறுகளை திருத்தாமல், பல்வித குளறுபடிகளுடன் இருப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுகுறித்து, அமராவதி விவசாயிகள் கூறியதாவது:அமராவதி பாசன சபை தேர்தல், மார்ச் மாதம் நடக்க உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில், அக்கறையின்றி செயல்படுகின்றனர். விவசாய நிலத்தின், க.ச., எண்கள் தவறாக பதிவாகியுள்ளன.ஒரு விவசாயிக்கு, வெவ்வேறு பகுதியில் நிலம் இருந்தாலும், ஒரு ஓட்டு மட்டுமே அளிக்க முடியும். ஆனால், பாசன சபை வாக்காளர் பட்டியலில், விவசாயிகள் பெயர் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.பழைய பட்டியலை நகல் எடுக்காமல், புதிய விவரங்களை பெற்று, குளறுபடி இல்லாமல் சரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X