அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழுதான சாலையை சீரமைத்த தி.மு.க.,வினர்

Added : நவ 29, 2019
Advertisement
 பழுதான சாலையை சீரமைத்த தி.மு.க.,வினர்

விழுப்புரம் : விழுப்புரம் நாராயணன் நகர் பகுதியில் பழுதான சாலையை, தி.மு.க.,வினர் சீரமைத்தனர்.

விழுப்புரம் பூந்தோட்டம் நாராயணன் நகர் மெயின்ரோடு பகுதி மிகுந்த பழுந்தடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.இந்நிலையில், விழுப்புரம் நகர 27 வது வார்டு தி.மு.க., சார்பில், நாராயணன் நகர் ராமகிருஷ்ணா பள்ளி முதல் சரஸ்வதி அவென்யூ வரையான சாலையை சீரமைக்கும் பணி, பொக்லைன் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

தி.மு.க., வார்டு செயலாளர் முருகன், பிரதிநிதிகள் பிரபா தனசேகர், மகேஷ், பொறுப்பாளர் வெங்கடேசன், இலக்கிய அணி சாதிக், சின்னசாமி, வேலுச்சாமி, எல்.ஐ.சி., ஷாத்தாஜி, எல்.எம்.சி., நடராஜன், விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சார்பில், சாலையை சீரமைத்ததாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X