சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்

Added : நவ 29, 2019
Advertisement

லாகூர், பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் காயமடைந்ததாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இது பயங்கரவாத தாக்குதல், அரசு மறைக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செலவுகளை சமாளிக்க வழி தெரியாமல் சவுதி உள்ளிட்ட நாடுகளிடம் பாக்., அரசு கடன் வாங்கி வருகிறது.இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகளுக்கும், பொது மக்களும் கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் அவ்வப்போது பயங்கரவாத சம்பவங்களும் நடந்து வருகிறன.ஏ.என்.ஐ., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பாகிஸ்தான் லாகூரில் உள்ள சாபர்கி பகுதியில் நேற்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்துள்ளதாகவும், தொடர்ந்து அங்கு விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இது வெறும் சிலிண்டர் வெடிப்பு அல்ல, பயங்கரவாத தாக்குதல். பிரச்னையை வெளிப்படையாக அறிவிக்க அரசு மறுத்து வருகிறது. இது பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிக்கவே செய்யும். உண்மை நிலையை அரசு ெவளிப்படையாக அறிவிக்க வேண்டும், என எதிர்க்கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X