புதுச்சத்திரம் : பிரதமரின் வீடு வழங்கும் திட்ட (அவாஸ் திவாஸ்) பயனாளிகள் விழிப்புணர்வு கூட்டம் ஆலப்பாக்கத்தில் நடந்தது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம், அகரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆதிநாராயணபுரம், தியாகவள்ளி, திருச்சோபுரம், காயல்பட்டு, வாண்டையாம்பள்ளம், தீர்த்தனகிரி, பூவாணிக்குப்பம் ஆகிய 10 ஊராட்சிகளில் அவாஸ் திவாஸ் திட்டத்தில், வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
பணிதள மேற்பார்வையாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுலவர் விஜயா அவாஸ் திவாஸ் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளிடம் 190 ரூபாய்க்கு அம்மா சிமென்ட் வழங்கப்படும், வீடு கட்டுபவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். நூறுநாள் வேலைத்திட்டம் மூலம் 20 ஆயிரம் வழங்கப்படும்.
எனவே விரைவாக வீடுகளை கட்டி முடிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார். ஊராட்சி செயலர்கள் செந்தில், வேலாயுதம், அமிர்தலிங்கம், விக்டரி, ஜெயந்தி, ராமானுஜம், சங்கர் பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் மணிசகர் நன்றி கூறினார்.