லண்டனில் கத்திக்குத்து பலர் காயம்| Dinamalar

லண்டனில் கத்திக்குத்து பலர் காயம்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
லண்டனில் கத்திக்குத்து  பலர் காயம்

லண்டன், லண்டனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கத்தியால் குத்தி ரகளையில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.பிரிட்டனின் தலைநகர் லண்டனின் மத்திய பகுதியில் லண்டன் பிரிட்ஜ் பகுதி உள்ளது. அங்கு நேற்று மதியம் மர்ம நபர் கண்ணில்பட்டவர்களை எல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். காயமடைந்த பலர் தப்பி ஓடினர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதையடுத்து அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X