பொது செய்தி

தமிழ்நாடு

தித்திக்கும் 'நெல்லி ஜாம்'...

Added : நவ 29, 2019
Advertisement
 தித்திக்கும் 'நெல்லி ஜாம்'...

சிவகங்கை : சிவகங்கையில் சிறுதானிய அவசியத்தை உணர்த்தும் விதத்தில், இவற்றில் பலவித உணவினை தயாரித்து விழிப்புணர்வோடு விற்பனை செய்து வருகிறார் ஆர்.உலகு. இவரது 'ஸ்பெஷல்' உணவு 'தித்திக்கும் தினை அல்வா' மற்றும்'நெல்லி ஜாம்'- க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

துரித உணவு கலாசாரத்தால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகிறோம். நம் முன்னோர்கள் சிறுதானியங்களை அதிகம் உணவில் சேர்த்ததால், 100 வயதுக்கு மேல் வாழ்ந்து காட்டினர். இதனால் துரித உணவால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி, சிறுதானிய உணவு பலகாரம் தயாரித்து அசத்துகிறார்.

தித்திக்கும் தினை அல்வா:

தினை, கோதுமை, கேரட், பீட்ரூட் அல்வா வகை தித்திக்க வைக்கும். ஆளி உருண்டை மார்பக புற்றுநோயை தடுக்கும், உடல் எடை குறையும். முடி நன்கு வளரும். பாசிப்பயறு உருண்டை உடல் சூட்டை தணித்து, சருமத்தை காக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். தினமும் சாப்பிட்டு வந்தால் பொலிவாகும் மேனி. ஜலதோஷம் நீங்கவும், இரும்பு சத்து பெற, சிறுநீர் பிரச்னை தீர,புரோட்டீன் சத்து கிடைக்க சிறுதானியங்களில் ஆளி, பாசிப்பயறு, கருப்பு உளுந்து, கொள்ளு, தினை, 23 வகை தானிய உருண்டை,கடலை,எள், பொரி கடலை உருண்டை இவரது 'ஸ்பெஷல்'.சர்க்கரை நோய் வராமல் தடுக்க, குழந்தை இன்மை பிரச்னை தீர்க்கும் முருங்கை கீரை, கண் சார்ந்த பிரச்னை தீர கருவேப்பிலை,தேவையற்ற கொழுப்பை குறைக்க கொள்ளு, புரோட்டீன் சத்துக்கு பருப்பு இட்லி பொடிகள் ஏராளம்.

'ஜிவ்னு' இழுக்கும்'நெல்லி ஜாம்':

இது மட்டுமின்றி நெல்லி, கேரட், பீட்ரூட் ஜாம் சிறப்பு.ரத்தத்தை அதிகரிக்க செய்வதில் கில்லி போல் சொல்லி அடிக்குது நெல்லி ஜாம். இது தவிர கேரட், பீட்ரூட் பர்பிக்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.ஆர்.உலகு கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்து, பி.லிட் (ஆங்கிலம்) முடித்தேன். ஆசிரியர் பணி செய்வதில் ஆர்வம் இருப்பினும், தானிய உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கவே, இப்பலகாரம் தயாரித்து விற்கிறேன், என்றார்.ஆர்டருக்கு 75987 04615.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X