பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்க பணிக்கு அரசு மரம் அகற்றம்

Added : நவ 29, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த பழங்கால அரசு மரம் அகற்றப்பட்டது.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் இருந்து கோலியனுார் கூட் ரோடு பகுதி வரையில், சாலை விரிவாக்கப் பணி, கடந்தாண்டு துவங்கியது. இதையடுத்து, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோடு பகுதியில், சாலையோரம் இருந்த பாலமுருகன் கோவில், ராஜகணபதி கோவில் மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டு ஆலயம் ஆகியவை அகற்றப்பட்டன.

சாலையோரம் இருந்த பழங்கால மரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.விழுப்புரம் மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகில் ராஜகணபதி கோவில் பின்புறம் இருந்த 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம், பொக்லைன் உதவியுடன் நேற்று அகற்றப்பட்டது.இதனால், அப்பகுதியில் காலை 11:00 மணி முதல் அரை மணி நேரம், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X