சவுதி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

Added : நவ 29, 2019
Share
Advertisement
சனா :தங்கள் பகுதிக்குள் நுழைந்த சவுதி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.தென்மேற்கு ஆசிய நாடான ஏமனின் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு ஆதரவாக சவுதியும் ஹவுதி படைக்கு ஆதரவாக ஈரானும்

சனா :தங்கள் பகுதிக்குள் நுழைந்த சவுதி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.தென்மேற்கு ஆசிய நாடான ஏமனின் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு ஆதரவாக சவுதியும் ஹவுதி படைக்கு ஆதரவாக ஈரானும் செயல்படுகின்றன.மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு பிரிவினைவாதிகள் ஏமனின் தென்பகுதியில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் இந்த போர் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. இருப்பினும் போர்முடிவுக்கு வரவில்லை.போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சவுதி இறங்கியுள்ளது. இந்த நிலையில் தான் ஏமன் கிளர்ச்சியாளர்கள் சவுதி ெஹலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் கூறியது: சவுதி கூட்டுப் படைகளின் ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்த எங்கள் பகுதிக்குள் வந்தது. அதை எங்களிடம் உள்ள ஆயுதங்கள் மூலம் சுட்டு வீழ்த்தினோம். இரு ஹெலிகாப்டர்களின் பைலட்களும் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்தனர். சவுதி தரப்பில் இதற்கு எந்த பதிலும் தரப்படவில்லை.இதனால் அமைதி முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஏமன் ரத்தக்களரியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர்கள் விடுவிப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவர சவுதி கூட்டுப் படைகள் தங்களிடமிருந்த 200 ஹவுதி போராளிகளை விடுவித்தது.இதுகுறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் துணைத் தலைவர் முகமத் அலி கூறும்போது, “சவுதியின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X