பொது செய்தி

தமிழ்நாடு

யானைகளால் ஓய்வறை சேதம் வனத்துறை கண்காணிப்பு அவசியம்

Added : நவ 29, 2019
Advertisement
 யானைகளால் ஓய்வறை சேதம் வனத்துறை கண்காணிப்பு அவசியம்

குன்னுார்:குன்னுார் - -ஹில்குரோவ் அருகே ரயில் பாதையில் உள்ள ஓய்வு அறையை யானைகள் தாக்கி சேதப்படுத்தியது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் துவங்கியுள்ளது. பர்லியார் பாலம் அருகே குட்டியுடன் சில யானைகள் முகாமிட்டுள்ளன. இதேபோல ஹீரோ சிங்கார பகுதிகளில் நான்கு யானைகள் முகாமிட்டு உணவை தேடி அப்பகுதி வழியாக சென்று வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது ஹில் குரோவ் மலை ரயில் பாதையிலும் வந்து செல்கிறது.இந்நிலையில், ஹில்குரோவிலிருந்து வடுகதோட்டம் பகுதிக்கு வந்த யானைகள், அங்கிருந்த பழமை வாய்ந்த ஓய்வறைகளை தாக்கி சேதப்படுத்தியது. மழையால் மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள், மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இங்குள்ள ஒரு அறையை பயன்படுத்தி வந்தனர். அனைவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில், ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. அருகிலிருந்த குடிநீர் குழாய் உடைந்தது.ஊழியர்கள் கூறுகையில், 'இந்த பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். ரயில் பாதையில், அடிக்கடி யானைகள் உலா வருவதால், அச்சத்துடன் பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X