பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

Added : நவ 29, 2019
Advertisement

செஞ்சி : செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல்; அமெரிக்கா செல்' தலைப்பில் மெகா வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.

நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கத்தில் 'தினமலர்' நாளிதழ், பட்டம் எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. தமிழில் வெளியாகும் ஒரே மாணவர் பதிப்பாகும்.பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை 'தினமலர் - பட்டம்' இதழ் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு கோவை அமிர்தா விஸ்வவித்யா பீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் வினாடி -வினா போட்டி சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டியில் முதல் பரிசு பெறும் அணியில் இரண்டு மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.செஞ்சிவினாடி வினா விருது 2019--20 போட்டி 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற தலைப்பில் செஞ்சி சாரதா மெட்ரிக்மேல்நிலை பள்ளியில் நடந்தது.

இப்போட்டியில் 150 மாணவ, மாணவிகள் தகுதி தேர்வாக பொது அறிவு தேர்வு எழுதினர். அதில்,16 பேர் தேர்வு செய்யப்பட்டு, 8அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் சிவசங்கரி 'தினமலர்' நினைவு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். மாணவிகள் இலக்கியா, வடிவுஸ்ரீ முதல் பரிசு பெற்றனர்.போட்டியில் பங்கேற்ற 8 அணியினருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

சத்தியமங்கலம்செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த போட்டியில் 150 மாணவ, மாணவிகள் தகுதி தேர்வாக பொது அறிவு தேர்வு எழுதினர். அதில்,16 பேர் தேர்வு செய்யப்பட்டு, 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் கவுசல்யா 'தினமலர்' நினைவு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். முதல் பரிசை மாணவிகள் சவுமியா, பிரியதர்ஷினி பெற்றனர்.

போட்டியில் பங்கேற்ற 8 அணியினருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.--------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X