பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் காக்கும்... 'குருதிக் கொடையாளர்கள் குழு'

Added : நவ 29, 2019
Advertisement
 உயிர் காக்கும்... 'குருதிக் கொடையாளர்கள் குழு'

காரைக்குடி : காரைக்குடி 'குருதி கொடையாளர்கள் குழு' மனிதஉயிர்களை காக்கும் மகத்தான சேவையை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேருந்தில் சென்ற ஒருவருக்கு ரத்தம் தேவை, என அழைப்பு வந்தது. அன்று தொடங்கிய குருதிக் கொடையாளர்கள் குழுவில் இன்று 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

தொடங்கிய 20 மாதங்களிலேயே, 200க்கும் மேற்பட்டோருக்கு ரத்தம் வழங்கியுள்ளனர். உறுப்பினர்களில் சிலர், 30க்கும் மேற்பட்ட தடவை ரத்ததானம் செய்திருக்கின்றனர்.இதற்காக தனி அட்டவணையை உருவாக்கி யார் எப்போது, கேட்டாலும் ரத்தம் வழங்க தயாராக இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தினமும் 10 யூனிட் வரை ரத்தம் கேட்டு அழைப்பு வருவதாகவும், 6 யூனிட் வரை தாங்கள் ரத்ததானம் செய்வதாகவும் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்பில் உருவான குழு இப்போது வெப்சைட் வரை முன்னேறியுள்ளது. இதன் மூலம் யாரும் எளிதில் ரத்தம் பெற முடியும். இக்குழுவின் நோக்கம் தங்களை விளம்பரம் செய்வதல்ல. தங்களைப் போன்று மற்றவர்களும் சேவை செய்ய முன்வர வேண்டும் என்பதே.

இவர்களின் வருத்தம் யாதெனில், உயிரை காக்க ரத்தம் வழங்க சென்றால், சிறிய மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படும் ரத்தத்தை பெரிய மருத்துவமனைகள் வாங்க மறுப்பதே என்கின்றனர். காப்பாற்ற பட வேண்டியது மனித உயிர்கள் தானே தவிர, மருத்துவமனையின் கவுரவம் அல்ல.

நிறுவனர் பிரகாஷ் மணிமாறன் கூறுகையில்;அவசரத்திற்கு ரத்தம் வழங்க முடியதாத நிலையில் உருவாக்கப்பட்டதே இந்த குழு. இந்த குழுவால், இப்போது அவசரத் தேவைக்கு உடனடியாக ரத்தம் வழங்கமுடியும். இதைப்போலவே, அனைத்து பகுதிகளிலும் குருதிக் கொடையாளர் குழு உருவாக வேண்டுமென்பதே எங்கள் கனவு. இவர்களை பாராட்ட: 98424 64326.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X