பொது செய்தி

தமிழ்நாடு

கலை உணர்வுடன் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : நவ 29, 2019
Advertisement

சிவகங்கை : பள்ளி ஆசிரியர்களுக்கு 'நிஸ்தா' திட்டத்தின் கீழ் தேசிய அளவில் கலை உணர்வுடன் கூடிய கல்வி கற்பிக்கும் பயிற்சி வகுப்பு சிவகங்கையில் நடந்தது.

மத்திய மனித வளத்துறையின் கீழ் தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் முன்னேற்றத்திற்கான (நிஸ்தா திட்டம்) முயற்சி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கலை உணர்வுடன் கூடிய கல்வி கற்கும் நோக்கில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.சிவகங்கை ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 825 பேர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நடனம், செயல் விளக்கம் மூலம் பாடம் கற்பித்தல் குறித்து பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள் பயிற்சி அளித்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.ஆசிரியர்கள் கும்மி பாட்டு, பரதம், நடனம், செய்முறை பொருட்களை கொண்டு பாடம் கற்பித்தில் போன்ற பயிற்சி பெற்றனர். இது தவிர 'போக்சோ' சட்டம் குறித்து விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு 'குட், பேட் டச்' குறித்து விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X