பொது செய்தி

தமிழ்நாடு

பணியிடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: பழங்குடி மக்கள் வேண்டுகோள்

Added : நவ 29, 2019
Advertisement
 பணியிடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: பழங்குடி மக்கள் வேண்டுகோள்

கூடலுார்:'கூடலுார், ஆர்.டி.ஓ., பணியிடமாற்றத்தை, ரத்து செய்ய வேண்டும்,' என, பழங்குடியினர் வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார் ஆர்.டி.ஓ.,வாக ராஜ்குமார் கடந்த ஆண்டு டிச., முதல் பணியாற்றி வருகிறார். அவர், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டத்துக்கு, ஆர்.டி.ஓ., வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதனை அறிந்த, முதுமலை ஊராட்சி பகுதியில் வசிக்கும் மவுண்டாடன் செட்டி மற்றும் பழங்குடி மக்கள், செம்பகொல்லி உள்ளிட்ட ஆதிவாசிகள் ஒருங்கிணைந்து, நேற்று, ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அவர், வெளியூர் சென்றிருந்ததால், அவர்கள் அவரை சந்திக்க முடியவில்லை.மக்கள் கூறுகையில், 'இவர், கூடலுாருக்கு நியமிக்கப்பட்ட நாள் முதல், பழங்குடிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக, பழங்குடிகளின் கல்வி மேம்பாட்டுக்கு தொடர்ந்து உழைத்தார். இதனால், பல மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.'மேலும், முதுமலை மாற்றிட திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடந்த, இவரின் நடவடிக்கை, நம்பிக்கைக்கு உரிய வகையில் உள்ளது. 'தற்போது, முதுமலையின் மூன்றாவது மாற்று திட்டம், சிறப்பாக நடைபெற இவர் போன்ற அதிகாரிகள் இங்கு பணியாற்றுவது முக்கியம். 'அதனால், இவரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய, மாநில முதல்வர்; மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X