பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின விழாவையொட்டி ஓவியப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

அரசு அருங்காட்சியகத்தில் நடந்த ஓவியப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு வானவில் படகு என்ற தலைப்பிலும், 3, 4ம் வகுப்புக்கு மீன் தொட்டி என்ற தலைப்பிலும், 5,6ம் வகுப்புக்கு திருவிழா என்ற தலைப்பிலும், 7, 8, 9ம் வகுப்புக்கு மழைக்காலம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடந்தது. பங்கேற்றவர்களை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். இந்திய கப்பற்படை ஓய்வு கமாண்டர் நடராஜன், ஓவியர் வேல்முருகன் பங்கேற்றனர்.

இதன்படி, 1,2ம் வகுப்பு பிரிவில் டி.டி.விநாயகர் பள்ளி யோகஷ் முதலிடமும், ராஜா தினகர்ஆர்.சி., துவக்கப்பள்ளி சாய்நேத்ரா இரண்டாம் இடமும், வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி ஷமிரா மூன்றாம் இடம் பெற்றனர். 3, 4ம் வகுப்பு பிரிவில் டி.டி.விநாயகர் பள்ளி ரிஷிதரன் முதலிடம், வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி மணாலி இரண்டாம் இடம், சேதுபதி நடுநிலைப்பள்ளி ரிஷா மூன்றாம் இடம் பெற்றனர். 5, 6ம் வகுப்பு பிரிவில் டி.டி.விநாயகர் நடுநிலைப்பள்ளி ஹரீஷ்மா முதலிடம், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி சபரிநாதன் இரண்டாம்இடம், சேதுபதி நடுநிலைப்பள்ளி மகாலட்சுமி மூன்றாம் இடம் பெற்றனர். 7,8,9 ம் வகுப்பு பிரிவில் ராஜா மேல்நிலைப்பள்ளி பாலவர்ஷினி முதலிடம், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி ஆகாஷ் இரண்டாம் இடம், சேதுபதி நடுநிலைப்பள்ளி கவி மூன்றாம் இடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு கமாண்டர் நடராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அருங்காட்சியக காவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X