பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் நீதிமன்றத்தில் சட்ட நாள் கொண்டாட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 70ம் ஆண்டு சட்ட நாள் கொண்டாடப்பட்டது.

திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிபதி(2) பாபு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உதயம், மேற்கொள்ளப்பட் சீர்திருத்தங்கள், அம்பேத்கார் உள்பட அரசியல் சட்டம் இயற்றியவர்களின் கடும் உழைப்பு குறித்து பேசினார்.திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிபதி(1) சுபத்திராதேவி, முதன்மை சார்பு நீதிபதி ராஜசிம்ம வர்மன், மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி பிரபாகரன், கூடுதல் சார்பு நீதிபதி மீனாட்சி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வாசுதேவன், குற்றவியல் நடுவர் நீதிபதி(2) நளினிதேவி ஆகியோர் சட்ட நாள் குறித்து விளக்கி கூறினர்.

நிகழ்ச்சியில், திண்டிவனம் வழக்கறிஞர் சங்க தலைவர் நாராயணன், செயலாளர் ராம் மனோகர், வழக்கறிஞர் நல சங்கசெயலாளர் கிருபாகரன், அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் நாகையா ,முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர்அருணகிரி, வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்து உறுதி மொழி ஏற்றுகொண்டனர்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி செளந்தர்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X