அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

Added : நவ 29, 2019
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக கிராமத்தினர் வட்டார கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.

இப்பள்ளி அறிவியல் ஆசிரியை சங்கீதா 47. இவரை, தலைமை ஆசிரியை கீதாஞ்சலி, பள்ளி இறை வணக்க கூட்டத்தில் திட்டியதாக கூறி, நவ.,27 அன்று பள்ளி ஆய்வகத்தில் இருந்த சோடியம் கார்பனேட்டை குடித்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சிவகங்கை வட்டார கல்வி அலுவலர்கள் லதாதேவி, பால்ராஜ், ஜஸ்டீன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியரை இடம் மாற்றம் செய்ய உள்ளதாக கிராமத்தினருக்கு தகவல் சென்றது. அவரை மாற்றக்கூடாது எனக்கோரி முத்துபட்டி கிராம மக்கள் நேற்று சிவகங்கை வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர் லதாதேவியிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X