பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடருக்கு 'கமாண்டோ' படை தீயணைப்பு அலுவலர் தகவல்

Added : நவ 29, 2019
Advertisement

குன்னுார்:'குன்னுாரில், பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தீயணைப்பு துறையின் 'கமாண்டோ' படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது,' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.குன்னுார் தீயணைப்பு நிலையத்தில், தளவாட பொருட்கள், வாகனங்கள் மற்றும் நிலையத்தை ஆய்வு செய்த, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) இமானுவேல் கூறியதாவது:சமீபத்தில், குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் ஆங்காங்கே மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனை அகற்ற சென்ற தீயணைப்பு துறையினர், இருபுறங்களிலும் செல்ல முடியாமல் இருந்தனர். இதற்கு தீர்வு காணும் நிலையில், வரும் நாட்களுக்கு, மேட்டுப்பாளையம் கல்லார் பகுதிகளில் 'கமாண்டோ' படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும், பர்லியார், மரப்பாலம் பகுதிகளில் இந்த குழுவினர் பேரிடர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X