கையை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கையை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

Added : நவ 29, 2019

மானாமதுரை : மானாமதுரை அருகே முன்விரோதம் காரணமாக கையை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.1000ம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காட்டைச் சேர்ந்தவர் அழகு மகன் தனசேகரன் 45,இவரை கடந்த 2010ல் இதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் சுரேஷ்(எ)முத்து முனியாண்டி முன்விரோதம் காரணமாக திருப்பாச்சேத்தி ரயில்வே கேட் அருகே வந்த போது வழிமறித்து கையை வெட்டினார்.திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மானாமதுரை சப்கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி உதயவேலன், குற்றவாளி சுரேஷ்(எ)முத்து முனியாண்டிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X