பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றியின் முகவரி 'சக்சஸ் மந்த்ரா!' கூடலூரில் இன்று, பிளஸ் 1, 2 மாணவர்களுக்காக நடக்கிறது

Added : நவ 29, 2019
Advertisement

கூடலுார்:புதிய பாடத்திட்டம் என்பதால், பிளஸ் 1, 2 பொதுத்தேர்வு, எப்படி இருக்குமோ என்ற கவலை, மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் இருக்கிறது. இந்த சந்தேகத்தை போக்கி, சாதிக்கத் துாண்டும் நிகழ்ச்சி தான், தினமலர் நாளிதழ் நடத்தும், 'சக்சஸ் மந்த்ரா.'கூடலுாரில், கோழிக்கோடு மெயின் ரோட்டில் உள்ள நர்த்தகி ஆடிட்டோரியத்தில், இன்று, காலை, 10.00 முதல், மதியம், 1:00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன், அமிர்தா விஸ்வ வித்யா பீடமும் இணைந்து வழங்குகிறது. இதில் பங்கேற்றால், பாடங்கள் குறித்த சந்தேகங்களை தெளிவுப்படுத்தி, அதிக மதிப்பெண் பெறலாம்.மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் கவனம் செலுத்தி வரும், 'தினமலர்' நாளிதழ், 'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்', 'வினாடி வினா' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.அந்த வரிசையில், தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் புதிய பாடத்திட்டங்களில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களுக்கு தீர்வு வழங்கும், 'சக்சஸ் மந்த்ரா' (ஜெயித்துக்காட்டுவோம், 2.0) நிகழ்ச்சியை நடத்துகிறது.பொதுத்தேர்வை பயமின்றி எழுதுவதற்கு, ஆலோசனை வழங்கும் இந்நிகழ்ச்சியில், பாடத்திட்ட தயாரிப்பு குழு வல்லுனர்கள், மிகச்சிறந்த கல்வியாளர்கள், பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பேசுகின்றனர். புதிய பாடத்திட்டம், பொதுத்தேர்வு நடக்கும் விதம், புதிய பாடத்திட்டத்தை மாணவர்கள் அணுகும் முறை, நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, சிறப்பான உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி சாதனை படைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பது, புத்தாக்க சிந்தனைகள் வளர்க்கும் விதம், சுய ஆற்றல், ஆழ்ந்த கற்றலின் வலிமை, தேர்வுக்கு முன் உடல் நலம், மனநலம் காப்பது, தேர்வை இனிதாக மாற்றுவது, கற்றதை தேர்வில் சிறப்பாக எழுதுவது, அதிக மதிப்பெண் பெறும் வழிகள் உள்ளிட்ட தலைப்புகளில் நிபுணர்கள் பயனுள்ள தகவல்களை வழங்குகின்றனர்.நிகழ்ச்சியில், முக்கிய குறிப்புகள் மற்றும் வினாக்கள் உள்ளடங்கிய புத்தகம், இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுடன், பெற்றோரும் பங்கேற்கலாம், அனைவருக்கும் அனுமதி இலவசம்.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே, உங்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை மிஸ் பண்ணிடாதீங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X