சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்டப சுவர் இடிந்து பெண் பலி; 5 பேர் காயம்

Added : நவ 29, 2019
Advertisement

சிவகாசி :விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டபம் சுவர் விழுந்து பெண் ஒருவர் பலியானார். ஐந்து பெண்கள் காயம் அடைந்தனர்.சிவகாசி- திருத்தங்கல் ரோடு காமராஜர் பூங்கா அருகே திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் உள்ள கருப்பணன் தெரு பகுதியில் வசிக்கும் பெண்கள் மண்டப சுவர் ஓரத்தில் அமர்ந்து பேசுவது வழக்கம். மண்டப மராமத்து பணிக்காக நேற்று காலை 10:00 மணிக்கு உணவு அருந்தும் அறை இடிக்கப்பட்டது. அப்போது மண்டபத்தின் பின்புறமுள்ள 20 மீட்டர் நீள சுற்றுச்சுவர் விழுந்தது.அங்கு அமர்ந்திருந்த அங்கம்மாள் 73, சண்முகம் 73, ஈஸ்வரி, ஜீவா 30, நாகம்மாள், கனியம்மாள் 53, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். இவர்களை 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு படை, போலீசார் மீட்டனர். இதில் கனியம்மாள் இறந்தார். மற்ற ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.டி.ஐ.ஜி., ஆனி விஜயா, எஸ்.பி., பெருமாள், உதவி கலெக்டர் தினேஷ்குமார், டி.எஸ்.பி., பிரபாகரன் அங்கு விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X