குன்னுார்:குன்னுார் எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மசேத்ராவில், புதிதாக கட்டப்பட்ட சித்தகிரி சாய் சுகாதார மைய திறப்பு விழாவில் பங்கேற்க, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருகை தருகிறார்.குன்னுார் எடப்பள்ளி சித்தகிரியில், சாய் தர்மசேத்ரா அமைந்துள்ளது. இங்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தன்வந்தரி சுவாமிக்கு வரும் டிச., 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி நாளை (1ம் தேதி) குரு வந்தனம், தேவதா அனுக்ஞை, மகா கணபதி பூஜை, மகா சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடக்கின்றன.2ம் தேதி, அங்கு புதிதாக கட்டப்பட்ட சித்தகிரி சாய் சுகாதார மையமான இலவச மருத்துவமனையை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைக்கிறார்.இதற்காக, கோவைக்கு காலை, 10:00 மணிக்கு வரும் கவர்னர், சாலை வழியாக குன்னுார் வந்து பகல், 12:30 மணிக்கு சுகாதார மையத்தை துவக்கி வைக்கிறார்.விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.