சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அப்புறப்படுத்தப்படுமா! பெரியசெவலை பள்ளியில் உள்ள பழைய கட்டடங்கள் ... அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் கடும் அவதி

Added : நவ 29, 2019
Advertisement

உளுந்தூர்பேட்டை : பெரியசெவலை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதி, கழிவறை வசதி இல்லாததோடு பாழடைந்த கட்டடத்தில் படித்து வருவதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில், பெரியசெவலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது) கடந்த 1912ம் ஆண்டு 5,760 சதுரடி பரப்பளவில் துவங்கப்பட்டது.பின்னர் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து, 1999ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 538 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 15 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பழமை வாய்ந்த இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருந்து வருகிறது. கடந்த 2007--08ம் ஆண்டு 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த குடிநீர் மேல் தேக்க தொட்டியும் பாழடைந்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலையில் உள்ளது.குடிநீர் தேக்க தொட்டி இருந்த இடத்தில் பைப் (டேப்) இல்லாமல் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கு என தனியாக குடிநீர் மேல் தேக்க தொட்டி இல்லாமல் இருந்து வருகிறது.



இதனால் மாணவர்களுக்கு குடிநீராக ஊராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பைப் லைன் மூலம் சிறிய தொட்டியில் தண்ணீரை சேமித்து வைத்து வினியோகித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு செல்லும் குடிநீர் பைப் லைன் என்பதால், காலையில் திறந்து விடப்படும். சிறிய தொட்டி நிரம்பியபின் கீழே வழிந்து நீர் வீணாகி வருகிறது. பள்ளி அருகில் இருப்பவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள சிறிய தொட்டியில் இருந்து தண்ணீரைப் பிடித்து சென்று விடுகின்றனர். இதனால் இருக்கின்ற தண்ணீரை குடத்தில் பிடித்து வைத்து மாணவர்கள் குடித்து வருகின்றனர்.

அதேபோல் மாணவர்களுக்கான கழிவறை போதிய வசதியில்லாமல் உள்ளது. மாணவர்கள் அதிகரிப்புக்கு ஏற்ப கழிவறை வசதி ஏற்படுத்தி தரவில்லை.எனவே பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதியையும், கழிவறை வசதியையும் ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் என்பதால், கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.உயர்நிலைப் பள்ளிக்காக தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

எனவே நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் படிக்கும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தையும், பாழடைந்து பயனற்று கிடக்கின்ற கட்டடங்களையும் இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டடங்களை கட்டி, பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X