கிள்ளை : கிள்ளை அருகே, சமுதாய கழிப்பிடம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கிள்ளை அடுத்த கோவிலாம்பூண்டி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், புதியதாக சமுதாய கழிப்பிடம் கட்டப்படுகிறது. அதற்காக, நடந்த பூமி பூஜையை, கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு..க, செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ., சிவஞானம் வரவேற்றார். முன்னாள் எம்.பி., இளங்கோவன், மாவட்ட துணை செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, இன்ஜினியர்கள் பெரியசாமி, கிருஷ்ணகுமார், கூட்டுறவு வங்கி தலைவர்கள் கணேஷ், ஆறுமுகம், தன கோவிந்தராஜன், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், ரயிலடி பாஸ்கர், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலர் செழியன், ஊராட்சி செயலர்கள் ஆனந்தன், கோதண்டம், கிள்ளை தமிழரசன், அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.