கள்ளக்காதலால் கணவன், மகள் கொலை கேரள பெண் மும்பையில் கைது

Added : நவ 29, 2019
Advertisement

மூணாறு :கேரளா இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே கழுதைகுளம்மேட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று தலைமறைவான பெண் குழந்தையுடன் மும்பையில் விஷம் குடித்தார். குழந்தையை கொன்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர்.சாந்தாம்பாறை புத்தடியைச் சேர்ந்தவர் ரிஜோஷ் 31. மனைவி லிஜி 29, மூன்று குழந்தைகள் இருந்தனர். கழுதைகுளம்மேட்டில் உள்ள பண்ணை தோட்ட தங்கும் விடுதியில் ரிஜோஷ் பணி செய்தார். அங்கு மேலாளராக இருந்த இரிஞாலக்குடயைச் சேர்ந்த வாசிமுக்கும் 31, லிஜிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து ரிஜோ ைஷ கொலை செய்து விடுதி அருகே புதைத்தனர்.அக்., 31ல் ரிஜோஷின் உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து உடலை கண்டு பிடித்தனர். லிஜி, வாசிம் நவ.,4ல் மாயமாகினர். லிஜி தன்னுடன் இரண்டு வயது மகள் ஜொவானாவையும் அழைத்துச் சென்றார்.விஷம் குடித்தனர் மும்பைக்கு தப்பிச் சென்று விடுதியில் தங்கியிருந்தபோது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இருவரும் விஷம் குடித்தனர். குழந்தை இறந்து கிடந்ததை நவ.9 ல் பார்த்த விடுதி ஊழியர்கள் லிஜி, வாசிமை மருத்துவமனையில் சேர்த்தனர்.உடல் நிலை தேறிய லிஜியை, மகளை கொலை செய்த வழக்கில் மும்பை போலீசார் கைது செய்தனர். சிகிச்சை பெறும் வாசிமை கைது செய்ய உள்ளனர்.'ரிஜோஷ் கொலை வழக்கில் தொடர் நடவடிக்கைகள் நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்படும்' என சாந்தாம்பாறை இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X